2025 மே 02, வெள்ளிக்கிழமை

ரியூசன் வகுப்புக்காக சென்ற எனது மகன் வீடு திரும்பவில்லை:ஆணைக்குழு முன் சாட்சியம்

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ரியூசன் வகுப்புக்காக சென்ற எனது மகன் வீடு திரும்பவில்லையென காத்தான்குடியில் நேற்று (06)நடைபெற்ற காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த மீராமுனைதீன் செய்னம்பு என்பவர் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கiயில், நான் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் வசிக்கின்றேன்.

1990ம் ஆண்டு அந்த பிரதேசத்தில் அசாதரண சூழல் நிலவிய காலம். அந்தக் காலப்பகுதியில்தான் எனது மகன் கடத்தப்பட்டார்.
அன்று எனது மகனுக்கு வயது 17 ஆகும். 1990.4.20. அன்று   காங்கேயனோடையிலிருந்து ஆரையம்பதிக்கு எனது மகன் ரியூசன் சென்றார்.
சென்றவர் வீடு திரும்பவில்லை. அவருடன் ரீயூசனுக்காக சென்ற மாணவர்கள் இருவரும் வீடு திரும்பி விட்டனர். அவர் கடத்தப்பட்டு விட்டார் என அறிந்தேன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் எனது மகனை கடத்தியதாக அறிந்தேன். எனது மகன் இருந்திருந்தால் என்னையும் எனது குடும்பத்தையும் பராமரித்திருப்பார்.

எனக்கு ஒரு ஆண் பிள்ளையும், ஒரு பெண் பிள்ளையும், அவர் காணாமல் போனதன் பின்னர் பல இடங்களில் தேடியும் மகன் கிடைக்க வில்லை.
எனது குடும்ப நிலையும் மிகவும் வறுமையானது, எனக்கு கனவருமில்லை என சாடசியமளித்தார்.

அங்கு  காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எச்.சரினா சாட்சியமளிக்கையில்,

எனது கணவர் 12.7.1990 அன்று கல்முனையிலிருந்து காத்தான்குடி வந்து கொண்டிருந்த போது குருக்கள் மடத்தில் வைத்து காணாமல் போனார்.

 அன்று அவருக்கு வயது 36, எங்களுக்கு  ஒரு பிள்ளையுண்டு. எனது கணவர் கல்முனையிலிருந்து வேனில் காத்தான்குடிக்கு வந்து கொண்டிருந்த போது குருக்கள் மடத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளார் என அறிந்தேன்.

அவருடன் அந்த வேனில் இன்னும 6 பேர் வந்திருந்தனர். அவர்களும் கடத்தப்பட்டதாக அறிந்தேன். தமிழீழ விடுதலைப் புலிகள்தான் எனது கணவரையும் அவரோடு வந்தவர்களையும் கடத்தியதாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

அன்று காணாமல் போனவர் தான் இன்னும் வீடு வந்து சேரவில்லை. காணாமல் போன எனது கணவர் குருக்கள் மடம் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

எனக்கு இருப்பதற்கு சொந்த வீடோ, சொந்த காணியோ இல்லை. என்னை எனது உறவினர்களே பராமரித்து வருகின்றனர் எனது அன்றாட வாழ்க்கை கஷ்;டத்துடனேயே செல்கின்றது என்றார்.

பூநொச்சிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த கச்சிமுகம்மது சித்தியும்மா  என்பவர் சாட்சியமளிக்கையில்,

எனது கணவர் ஹசன் ஐயுப்கான் என்பவர்  25.7.1992ஆம் ஆண்டு பூநொச்சிமுனை கடலில் மீன் பிடிப்பதற்காக சென்றார் அப்போது அவர் கடலுக்கு சென்றவர் வீடுவந்து சேரவில்லை.

 கணவருடன் மீன் பிடிக்க கூடச் சென்ற இருவரும் வீடு வந்தனர். எனது கணவர் வரவில்லை. கடலில் வைத்து எனது கணவர் கடத்தப்பட்டு விட்டார் என்ற செய்திதான் எனக்கு கிடைத்தது.

கடலில் வைத்து படகு ஒன்றில் கடத்தப்பட்டதாக எனது கணவருடன் கடலுக்கு சென்று வீடு திரும்பியவர்கள்; மூலம் அறிந்து கொண்டேன்.

 கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு படகில் வந்த மூவர் எனது கணவரை கடத்திச் சென்றதாக அறிந்தேன்.

எனக்கு மூன்று பிள்ளைகளுண்டு. நாளாந்தம் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து வந்து தான் எங்களது அன்றாட வாழ்க்கை சென்றது. எனது கணவர் இல்லாத சூழ் நிலையில் மிகவும் கஷ்ட்டப்பட்டேன் என சாட்சியமளித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .