2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

செலுத்தப்படும் வரிப்பணம் வளமான வாழ்விற்கான அர்ப்பணம்

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


செலுத்தப்படும் வரிப்பணம் வளமான வாழ்விற்கான அர்ப்பணம் எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு மாநகரசபைக்கு நிலுவையாகவுள்ள 80 மில்லியன் ரூபாவை அறவிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபை ஜூன் 2014ஐ, வருமானம் ஈட்டும் மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளதை முன்னிட்டு, வரிகள் அறவிடுதல் சம்பந்தமான செயற்றிட்ட பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு மாநகர சபையின் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (06)  நடைபெற்றது.

இதில் ஆணையாளர் கருத்து தெரிவிக்கையில்,

அறவிடப்படும் வருமானங்கள் யாவும் 20 வட்டாரங்களைக் கொண்ட மாநகர சபையில் ஓவ்வோரு வட்டாரத்திற்கும் ஒருவேலைத்திட்டம் செய்யப்படவுள்ளதாக  தெரிவித்தார்.

முத்திரை தீர்வை 35 மில்லியன், ஆதன வரி 25 மில்லியன், குத்தகைகள் 7 மில்லியன், வியாபார வரி 7 மில்லியன், வாடகைகள் 2.5 மில்லியன் உட்பட பல்வேறு வரிகளாக மொத்தம் 80 மில்லியன் உள்ளன.

ஜூன் மாதம் 4 வாரங்களாகப் பிரிக்கப்பட்டு வரிகளை அறவிடத் தீர்மானித்துள்ளதாகவும், வியாபார வரி செலுத்ததோருக்கு வழக்குகள் மூலமும் மற்றும் 30797 ஆதனங்களிலிருந்து ஆதன வரி செலுத்தாத ஆதன உரிமையாளர்களுக்கு நடுக்கட்டு மூலமும் நிலுவையாகவுள்ள வரிகள் அறவிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாநகர உதவி ஆணையாளர் என். தனஞ்செயன், பொறியியலாளர் பி. அச்சுதன்,மக்கள் தொடர்பாடல் அதிகாரி எஸ். பிரதீபன் உட்பட நிர்வாக ஊழியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X