2025 மே 02, வெள்ளிக்கிழமை

விபத்து ஒருவர் பலி

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் வியாழக்கிழமை (05) இரவு இடம்பெற்ற விபத்தில்,  மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காருடன் மோதுண்டு உயிரிழந்ததாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த செல்வராசா பிரசாந்த் (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார்.படுகாயமடைந்த நிலையில் நேற்றிரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று (06) மாலை மரணமடைந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வேகக் கட்டுப்பாட்டை இழந்து குறித்த நபர் காருடன் மோதியுள்ளதாகவும்; வியாழக்கிழமை (05) நண்பகல் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியில் பயணித்ததால் 3 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .