2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இறந்தவர்களின் உடல்களையாவது தருமாறு கோரினோம்:ஆணைக்குழுவில் சாட்சியம்

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


1990 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு கொல்லப்பட்டவர்களின் உடல்களையாவது தருமாறு கோரினோம் ஆனால் அவர்களின் உடல்கள் கூட கிடைக்கவில்லையென காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி எம்.வை.அப்துர் றஸ்ஸாக் காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இரண்டாவது தினமாகவும் இன்று(07) நடை பெற்ற காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிகையில்,

1990ஆம் ஆண்டு கல்முனையிலிருந்து காத்தான்குடி நோக்கி வந்த காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் கடத்தப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி எங்களுக்கு கிடைத்தவுடன் கடத்தப்பட்டவர்களை மீட்பதற்காக காத்தான்குடியிலுள்ள உலமாக்கள் சார்பில் நாங்கள் ஐந்து உலமாக்கள் குருக்கள் மடம் புதுக்குடியிருப்பு பகுதிக்கு சென்றோம்.  அந்த உலமாக்கள் குழுவுக்கு நானே தலைமை தாங்கிச் சென்றேன்.

 நாங்கள் அந்தப்பகுதிக்க சென்று அங்குள்ள கிறஸ்த்தவ ஆலயத்தில் வைத்து அங்கிருந்த மதகுருமாரை சந்தித்து கடத்தப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களை விடுவிப்பதற்கு நடடிவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம் அவர்களும் எமது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு விடுதலைப்பலிகளின் அன்றைய அந்த பிரதேச பொறுப்பாளர்களுடன் பேசினார்கள்.

அப்போது  கடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியே அவர்கள் மூலமாக எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் சந்தித்த அந்த நேரத்திலிருந்து இரண்டு மணித்தியாலயங்களுக்குள் முன்னர் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி அவ்விடத்தில் கிடைத்தது.

 நாங்கள் அந்த கிறிஸ்த்தவ தேவாலயத்துக்குள் கிறிஸ்த்தவ மதப்பெரியார்களுடன் பேசிக் கொண்டிருந்த போது குருக்கள் மடம் பகுதியில் வசிப்பதாக கூறப்படும் பெண்ணொருவர் தேவாயலத்திற்கு வருகை தந்து குருக்களமடம்; கடற்கரை பகுதில் நேற்றிரவு இரவு அல்லாஹு அக்பர் என்று மக்கள் கூக்கரலிடும் சத்தப்பம் கேட்டது. அந்த சத்தத்துடன் துப்பாக்கி சத்தங்களும் கேட்டது என்று அப்பெண் கூறினார்.

 கடத்தப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என நாங்கள் நினைத்துக் கொண்டோம்.

 அப்போது நாங்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டவர்களின் ஜனாசாக்களையாவது பெற்றுத்தாருங்கள் நாங்கள் இஸ்லாமிய முறைப்படி, அவர்களை அவர்கள் உடுத்திருக்கும் துனிகளாலேயே கபன் செய்து அவ்விடத்திலேயே அடக்கம் செய்கின்றோம் எனக் கேட்டோம் முடியாது என்ற தகவலே கிடைத்தது.

 நாங்கள் தேவாலயத்திற்குள் பேசிக் கொண்டிருந்த போது வந்தவர்களை வெளியேற்றுங்கள் ,ல்லையெனில் அவர்களின் கதையும் முடியும் என மதப்பெரியார்களுக்கு ஒரு தகவல் வந்தது. அதையடுத்து நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம்.

 நாங்கள் சந்தித்த திகதி மற்றும் தேவாலயத்தின் பெயர்கள் ஞாபகத்தில் இல்லை. அதே போன்று நாங்கள் சந்தித்த கிறிஸ்த்தவ மதப் பெரியார்களின் பெயர்களும் எனக்கு ஞாபகமில்லை என மௌலவி எம்.வை.அப்துர் றஸ்ஸாக் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X