2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சுற்றுவட்ட காரியாலயம் விவேகானந்தபுரத்தில்

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சுற்றுவட்ட காரியாலயம் கடந்த முதலாம் திகதியிலிருந்து உத்தியோக பூர்வமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் கிராமத்தில் இருந்து இயங்கிவருவதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சுற்றுவட்ட காரியாலய உதவி அலுவலகர் பி.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
இப்பகுதியில் மிக அண்மைக்காலமாக தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளதனால் அப்பகுதி மக்கள் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க இக்காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது.
 
இக்காரியாலயத்தில் இருந்து படுவாக்கரைப் பகுதியான போரதீவுப்பற்று மற்றும் பட்டிப்பளை ஆகிய இரண்டு பிரதேசங்களினுள் உள்வரும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்தி, விரட்டவுள்ளதாகவும், இவற்றுக்காக வேண்டி இந்த சுற்றுவட்ட காரியாலயத்திற்கென 6 உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் எதிர் காலத்தில் பொதுமக்கள் யானைகளிடமிருந்து பாதுகாத்துக் கொண்வதற்கான விழிப்புணர்வுகளையும் வழங்கவுள்ளதோடு மக்கள் தங்களிடம் கேட்டுகும் பட்சத்தில் உரிய யானை வெடிகளை வழங்கவுள்ளதாகவும்,
 
பட்டிப்பளை மற்றும் போரதீவுப்பற்று பிரதேசத்தினுள் காட்டு யானைகள் உள்வருவதனை பொதுமக்கள் அறிந்தால், வன ஜீவராசிகள் சுற்றுவட்ட காரியாலயம், மாவடி வீதி, விவேகானந்தபுரம், வெல்லாவெளி என்ற முகவரியுடனோ அல்லது 0712320780 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ உடனடியாக 24 மணிநேரமும் தொடர்பு கொள்ள முடியும். எனவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சுற்றுவட்ட காரியாலய உதவி அலுவலகர் பி.ஜெகதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X