2025 மே 01, வியாழக்கிழமை

குடும்பஸ்தர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை(06) மாலை இடம்பெற்றுள்ளது.

வவுணதீவு – காஞ்சிரங்குடா பனையறுப்பான் கிராமத்தைச் சேர்ந்த பாலிப்போடி குணசீலன் (வயது28) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தாக்துதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபர் தடிகளாலும், தலைக் கவசத்தினாலும் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்புப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

தான் தனது வீட்டுக்கு வந்த போது தனது மனைவியிடம் விசாரணை செய்து  கொண்டிருந்த நபர்கள் தன்னைத் துரத்தி வந்து தாக்கி விட்டுத் தப்பிச் சென்றதாக தாக்குதலுக்கு ஆளான நபர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .