2025 மே 01, வியாழக்கிழமை

நிறைவான இல்லம் வளமான தாயகம்

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மக்களை வலுவூட்டும்,  2014ஆம் ஆண்டுக்கான தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' 'கிராமம் கிராமமாக வீடு வீடாக'  எனும் செயற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினால் திக்கோடை கணேச வித்தியாலயத்தில் நடமாடும்சேவை இன்று சனிக்கிழமை (07)இடம்பெற்றது.
 
இந்நடமாடும் சேவையின்போது திக்கோடை, நவகிரிநகர், வம்மியடியூற்று, களுமுந்தன்வெளி, செல்வாபுரம், தும்பங்கேணி, காந்திபுரம், இளைஞர் விவசாயத்திட்டம், ஆகிய 8 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சேவைகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக போரதீவுப் பற்று பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

இந்நடமாடும் சோவையின்போது பதிவாளர் நாயக திணைக்கள சேவைகள், ஆட்பதிவுத் திணைக்களம், பதிவு மற்றும் உறுதிப்படுத்தல் சேவைகள்,  காணி, வீடமைப்பு மற்றும் அதனோடிணைந்த சேவைகள், சமூகசேவைகள், திவிநெகும வாழ்வாதார நடவடிக்கைகள், சுகாதார சேவைகள் மற்றும் பிரதேச சபை சேவைகள், பொதுத் தேவை நடவடிக்கைகள், கல்வி கலாசார மற்றும் தொழிற் பயிற்சி சேவைகள், நீப்பாசன மற்றும் சுற்றாடல்சார் சேவைகள், பொலிஸ் சேவைகள், மற்றும் மாட்ட செயலகம் பிரதேச செயலகங்களின் சேவைகள் என்பன நடைபெற்றன.

இதனைவிட எதிர் வரும் 14ஆம் திகதி மட்ஃதம்பலவத்தை கனிஷ்ட வித்தியாலயத்திலும், 17 ஆம் திகதி வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச செயலக வளாகத்திலும், 21ஆம் திகதி மட்.ஆனைகட்டியவெளி நாமகள் வித்தியாலயத்திலும், 28 ஆம் திகதி மட்.கோவில் போரதிவு விவேகானந்தா மகாவித்தியாலயத்திலும் இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளதாக போரதிவுப்பற்று பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .