2025 மே 01, வியாழக்கிழமை

இஸ்லாமிய வர்த்தகர் அமைப்பின் தலைவராக கலீல் மீண்டும் தெரிவு

Kanagaraj   / 2014 ஜூன் 08 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர் அமைப்பின் தலைவராக கே.எம்.எம்.கலீல் ஹாஜியார்(பிளாள்) மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வர்த்தக சமூகத்தின் ஒன்று கூடல் பாலமுனையிலுள்ள வளவில் நேற்றிரவு (7.6.2014) நடைபெற்றது.

இதன்போதே தலைவராக மீண்டும்  அவர் தெரிவு செய்யப்பட்டார்.

இவ்வமைப்பின் செயலாளர்களாக எம்.என்.பெறோஸ் மற்றும் எம்.அமீன் நழீமி, பொருளாளராக ஏ.எல்.எம்.மீராசாகிபு உட்பட 11 பேர் அடங்கிய நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது மட்டக்களப்பு நகரில் மிக நீண்ட காலமாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மூத்த வர்த்தகர் எம்.எம்.இ.ஆதம்பாவா ஹாஜியார் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இதன் போது ஒன்று கூடல் இடம் பெற்றதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .