2025 மே 01, வியாழக்கிழமை

கைக்குண்டு மீட்பு

Kanagaraj   / 2014 ஜூன் 08 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

வாகரை, புச்சாக்கேணி கிராம சேவகர் பிரிவிலுள்ள பலநோக்கு மண்டபத்திலிருந்து கைக்குண்டு ஒன்று இன்று(08) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வாகரை பிரதேச மக்களுக்கான நடமாடும் சேவை நாளை (09) குறித்த கட்டிடத்தில் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் சேவையினை முன்னிட்டு மண்டபத்தை சுத்தப்படுத்தும் பணிகளில் இன்று(08) சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டிருந்தனர். 

இதன்போது  கிராமசேவகர் கடமையாற்றும் அறையினுள்  இருந்த ஆசனம் ஒன்றின் கீழ பகுதியில் மர்ம பொருள் ஒன்று தென்படுவதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டு ஒன்றினை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைக்குண்டு  எவ்வாறு கட்டிடத்தினுள் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .