2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மரக்காலை தீக்கிரை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 09 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் செம்மண்ணோடைக் கிராமத்திலுள்ள மரக்காலையொன்று திங்கட்கிழமை (09) அதிகாலை  தீக்கிரையானதால், சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மரக்காலையில்  தீ பிடித்து எரிவதைக் கண்ட  அயலவர்கள் தீயை அணைத்தனர். இதனால், தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இதன்போது இயந்திரங்கள், முதிரை மரத்தினால் செய்யப்பட்ட தளபாடங்கள், அறுக்கப்பட்ட மரங்கள்  உள்ளிட்டவை எரிந்துள்ளன.

இத்தீ விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X