2025 மே 01, வியாழக்கிழமை

யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 09 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு  மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லடிவெட்டைக் கிராமத்தில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி மாவடிவேம்பைச்; சேர்ந்த விவசாயியான   மு.சீனித்தம்பி (வயது 57) என்பவர் உயிரிழந்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்  05 பிள்ளைகளின் தந்தை ஆவார்.

மேற்படி கிராமத்திலுள்ள வயல்வெளியில் வாடி அமைத்து தங்கியிருக்கும் இவர், ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை காலைக்கடன் முடிப்பதற்;காக அருகிலுள்ள  காட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் இவர் திரும்பவும்  வயலிலுள்ள வாடிக்கு வந்து சேராததினால்,  இவரை  உறவினர்கள்  தேடியபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .