2025 மே 01, வியாழக்கிழமை

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

Kanagaraj   / 2014 ஜூன் 09 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முறுத்தானை கிராம சேவகர் பிரிவில், வயல் பிரதேசம் ஒன்றில் யானை தாக்குதலுக்கு இலக்கான விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், மாவடிவேம்பு 01 சித்தாண்டியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான, முத்துவேல் சீனித்தம்பி (57) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முறுத்தானை நாப்பத்தாவில் உள்ள வயல் பிரதேசத்தில் வயல் வேலைகளுக்காக தங்கி இருக்கும் குறித்த விவசாயி நேற்று (08)  காலை முதல் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அயலவர்கள் மற்றும் உறவினர்கள் அவரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து இன்று(09) அருகில் உள்ள காட்டுப்பகுதில் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .