2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வறிய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 09 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


அல் கிம்மா சமுக சேவைகள் நிறுவனத்தின் அனுசரனையில் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் வறிய மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு நேற்று(08) மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ஏ.எம்.அன்வர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபையின் பதில் தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஏறாவூர் கோட்டக் கல்வி அதிகாரி ஐ.எல்.மஹ்றூப், அமீர்அலி வித்தியாலய அதிபர் எம்.மஹ்றூப், கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் எம்.ரீ.ஹைதர், அல் கிம்மா சமுக சேவைகள் நிறுவனத்தின் செயலாளர் ஐ.எம்.ரிஸ்வி, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.எம்.ஜெமிலுன் நிஸா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயம், மீராவோடை அமீர் அலி வித்தியாலயம், மீராவோடை உதுமான் வித்தியாலயத்தைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டதுடன் ஓட்டமாவடி அல் ஹிலால் அஹதியா பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X