2025 மே 01, வியாழக்கிழமை

வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம்

Kogilavani   / 2014 ஜூன் 16 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய இடங்களில் அவர்கள் கடமைப் பொறுப்பேற்றிருப்பதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு வைத்திய அதிகாரியாகப் பணியாற்றிய கலையரசி துரைராஜசிங்கம் திங்கட்கிழமை(16) ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

அதேவேளை ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரியாகப் பணியாற்றிய எம்.எச்.எம்.தாரிக் ஏறாவூர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய எஸ்.ஏ.சி.எம்.பழீல் செங்கலடி பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியாகவும் கடமையேற்றுள்ளார்.

இதேவேளை, செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றிய நிலூபா தாரிக் மீராகேணி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியராகப் கடமையேற்றுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .