2025 மே 01, வியாழக்கிழமை

செங்கோல் மு.கா வசம்: கிழக்கு சபையமர்வு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 17 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாண சபை அமர்வின் போது முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு வந்த அவசர கவன ஈர்ப்பு பிரேரணை விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படாததை அடுத்து ஏற்பட்ட அமளிதுமளியினால் சபையமர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அளுத்கம, பேருவளை, தர்ஹா மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சரான நஸீர் அஹமட் உள்ளிட்ட  உறுப்பினர்கள் அவசர கவன ஈர்ப்பு பிரேரணை ஒன்றைக் கிழக்கு மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தனர்.

அந்த அவசரப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துகொள்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. இதனையடுத்தே முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் செங்கோலைக் கைப்பற்றி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான அமைச்சர் நஸீர் அஹமட். ஏ.எம். ஜெமீல் அன்வர் றம்ழான் முஹம்மட், ஏ.எல்.எம். நஸீர், மற்றும் ஏ.எல். தவாம் ஆகியோரே செங்கோலை கைப்பற்றிக்கொண்டு அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

இந்த உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து சபைக்கு இன்று செவ்வாய்க்கிழமை சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0

  • uwais Tuesday, 17 June 2014 03:57 PM

    கொடுங்கோல் ஆட்சியில் ஒட்டிக்கிட்டு அல்லவா இருக்கிங்க. செங்கோல எடுத்தாத்தான் என்ன வெச்சாத்தான் என்ன? நீங்களும் உங்கட நடிப்பும்???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .