2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வடிகான்கள் துப்பரவு செய்யும் பணி

Suganthini Ratnam   / 2014 ஜூன் 18 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்

காத்தான்குடியிலுள்ள வடிகான்களை துப்பரவு செய்யும் வேலைத்திட்டத்தை இன்று புதன்கிழமை நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் ஆரம்பித்து வைத்தார்.

உள்ளூராட்சி வாரத்தை  முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆரம்ப வேலைத்திட்டத்தில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர், எம்.அலிசப்ரி, நகரசபை செயலாளர் உட்பட பலர் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வேலைத்திட்டத்தின் மூலம் வடிகான்களினுள்  தேங்கி நிற்கும் மண் உட்பட கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டு, வடிகான்களில் கழிவு நீர் சீராக ஓட நடவடிக்கை எடுக்கப்படுமென காத்தான்குடி நகரசபைத்  தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

இதேவேளை, புளியந்தீவுப் பகுதிகளில் நீரோட்டமின்றி அடைபட்டுள்ள வடினான்கள்  மட்டக்களப்பு மாநகரசபையின் கனரக வாகனங்களைக் கொண்டு இன்று புதன்கிழமை துப்பரவாக்கப்பட்டன.
 

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X