2025 மே 01, வியாழக்கிழமை

விவசாயப் போதனாசிரியர்களுக்குப் பயிற்சி

Kogilavani   / 2014 ஜூன் 18 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ.ஹுஸைன்


வாழ்வாதாரத்தை ஸ்திரப்படுத்தல், உணவுப் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு ஆகிய விடயங்களை உள்ளடக்கி பயிற்சிகள் விவசாயத் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு விவசாயத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாயப் பயிற்சிப் பாடசாலையில் புதன்கிழமை (18) காலை பயிற்சிகள் ஆரம்பமாகின.

விவசாயப் போதனாசிரியர்கள், விவசாயத் திணைக்கள உதவிப் பணிப்பாளர்கள், பாடவிதான உத்தியோகர்கள் உள்ளிட்ட 52 பேர் இந்த 3 நாள் வதிவிடப் பயிற்சிகளில் பங்குபற்றுவதாக விவசாயத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன் மேலும் கூறினார்.

விவசாயத் திணைக்கள வவுனியா விரிவாக்கல் பிரிவின் பிரதி மாகாணப் பணிப்பாளர் சகீலாபானு அஸரக், கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய ஆய்வு அதிகாரி எஸ்.ராஜேஸ்கண்ணா, வடமாகாண பணிப்பாளர் அலுவலக விடயதான அலுவலர் கே.தனபாலசிங்கம் ஆகியோர் இந்தப் பயிற்சி நெறியில் வளவாளர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

பயிர்ச் செய்கைப் பிரதேசங்களில் இடம்பெயர் சேவை முகாம்களை நடத்தி அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிமுறைகளும் இந்தப் பயிற்சி நெறியில் அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதாக விடயதான அலுவலர் கே.தனபாலசிங்கம் கூறினார்.

நீடித்து நிலைக்கக் கூடிய விவசாயப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் வறுமையை இயல்பாகவே ஒழித்து விடமுடியும் எனும் இலக்கை அடிப்படையாகக் கொண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களை வலுப்படுத்துவதாக இந்தப் பயிற்சிநெறி வடிவமைக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்கள வவுனியா விரிவாக்கட்; பிரிவின் பிரதி மாகாணப் பணிப்பாளர் சகீலாபானு அஸரக் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .