2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யோகேஸ்வரன் எம்.பி.க்கு எதிராக துண்டுப் பிரசுரம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 22 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்து இளைஞர் பேரவையினால் உரிமை கோரப்பட்டுள்ள அந்த துண்டுப் பிரசுரத்தில், வாழைச்சேனை – புதுக்குடியிருப்பு ஸ்ரீபத்தரகாளி அம்மன் கோயில் நிருவாகத்தை யோகேஸ்வரன் எம்.பி, ஆக்கிரமித்துள்ளதாக அதிருப்தி வெளியிட்டே இந்த துண்டுப் பிரசுரம் சனிக்கிழமை (21) விநியோகிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தியே அவர் இவ்வாறு செயற்படுகின்றார் என்று அந்தத் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் தனது பரம்பரைக்குச் சொந்தமானது என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினர், இக்கோயிலை தனது முழுமையான ஆதிக்கத்துக்குள் கொண்டுவர முயற்சிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அந்தப் பிரசுரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வெளிநாட்டில் வாழும் எமது சகோதரர்களிடம் கோயிலுக்கெனச் சேர்க்கப்படும் நிதிகளுக்கு என்ன நடக்கின்றது?. இந்த நிதி நாடாளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வேலைகளுக்காக பயன்படுத்துவது எந்தவகையில் நியாயமாகும்?. கிழக்கு மாகாணத்திலுள்ள கோயில்களைப் படம்பிடித்து வெளிநாடுகளுக்கு அனுப்பிச் சேர்க்கும் நிதிகளுக்கு என்ன நேர்கிறது?

1954 - 1955 ஆண்டு காலப் பகுதியில் புதுக்குடியிருப்பு ஸ்ரீபத்தரகாளி அம்மன் கோயில் கொக்கட்டி மரத்தின் கீழ் ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அகுமன், காசுபதியர், செல்லையா துக்குமார் ஆகியவர்களைக் கோயில் நிருவாகத்திலிருந்து துரத்தியடித்தது நியாயமா? என்றும் அந்தப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X