2025 மே 01, வியாழக்கிழமை

சர்வதேச விதவைகள் தினம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2014 ஜூன் 24 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


விழுது ஆற்றல் மேம்;பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (23) சர்வதேச விதவைகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

மேற்படி அமையத்தின்; மட்டக்களப்பு மாவட்ட திட்ட இணைப்பாளர் புண்ணியமூர்த்தி ஜீவிதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  
விழுது ஆற்றல் மேம்;பாட்டுமையத்தின் தலைமைக் காரியாலயத்தின் சார்பாக நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் இந்துமதி ஹரிகர தாமோதரன், வெளிக்கள உத்தியோகத்தர் எம்.சிவாஜீ, மட்டக்களப்பு மாவட்ட சமாசம் பெண்கள் வலையமைப்பின் தலைவி எஸ்.தேவி உட்பட விழுது நிறுவன செயற்பாட்டாளர்களும் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவிகள், சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விதவைகள் சிறந்த வாழ்க்கையினை அனுபவிக்கவும் எமது அத்தியாவசிய தன்மையை உலகிக்கு உணர்த்தவும் அனைத்து விதவைகளின் உரிமைகளுக்கான குரல்கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .