2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பிரதேச சபைக்கான புதிய கட்டடம், சந்தை கட்டடத்தொகுதி திறப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 25 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச சபைக்கான  புதிய கட்டடம் மற்றும் சந்தை கட்டடத்தொகுதியை கிழக்கு மாகாணசபை  உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் புதன்கிழமை (25) திறந்துவைத்துள்ளார். 

மேற்படி பிரதேச சபைக்கான  புதிய கட்டடம் மற்றும் சந்தை கட்டடத்தொகுதி திறந்துவைக்கப்பட்டு நினைவுப்பலகையும்  திரைநீக்கம் செய்யப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புறநெகும திட்டத்தின் கீழ், மண்முனைப்பற்று பிரதேச சபைக்கான  புதிய கட்டடம் 15 மில்லியன் ரூபா செலவிலும் சந்தை  கட்டடத்தொகுதி 13.5 மில்லியன் ரூபா செலவிலும் நிர்மாணிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,  கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளர் ஏ.எம்.ராபி, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமான பி.பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.வாசுதேவன், மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜே.அருள்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X