2025 மே 01, வியாழக்கிழமை

தொழில்நுட்ப பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2014 ஜூன் 26 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மகிந்தோதைய தொழில்நுட்ப பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வியாழக்கிழமை (26) நடைபெற்றது.

மட்.களுதாவளை மகாவித்தியாலய அதிபர் எஸ்.அலோசியஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ஞா.ருத்திரமலர், பொன்.இரவீந்திரன், பட்டிருப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.உலககேஸ்பரம், மட்டக்களப்பு கச்சேரியின் பிரதம கணக்காளர் க.நேசராசா, ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

மத்திய கல்வி அமைச்சினால் 25 மில்லியன் ரூபா செலவில் 30 அடி அகலமும் 90 அடி நீளமும் கொண்ட மூன்று மாடி படசாலைக் கட்டடம் இதில் அமைக்கப் படவுள்ளதாகவும், இங்கு அமையவிருக்கும் புதிய பாடசாலைக் கட்டடத்தில் முதலாம், இரண்டாம் மாடிகள் மாணவர்களின் செயற்பாட்டுப் பிரிவுகளாகவும், மூன்றாவது மாடி கற்றலுக்குரியதாகவும் அமையப் பெறவுள்ளதாக மட்.களுதாவளை மகாவித்தியாலய அதிபர் எஸ்.அலோசியஸ் தெரிவித்தார்.

மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தில் தற்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப பாடப்பிரிவுகாக 180 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 140 மாணவர்கள், கல்முனை, கல்லாறு, களுவாஞ்சிகுடி, கிரான்குளம் மற்றும் படுவான்கரைப்பிரதேசம் போன்ற தூர இடங்களிலிருந்து வந்து கற்பதாகவும் மட்.களுதாவளை மகாவித்தியாலய அதிபர் எஸ்.அலோசியஸ் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .