2025 மே 01, வியாழக்கிழமை

இலவச மின்விசிறிகள் வழங்கும் வைபவம்

Kanagaraj   / 2014 ஜூலை 01 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு இலவச மின் விசிறிகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை (01) இடம்பெற்றது.

ஏறாவூர் நகரசபையினால் இந்த மின் விசிறிகள் அன்பளிப்பு செய்யப்பட்டதாக வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுத் தலைவர் யூ.எல். முஹைதீன்பாபா தெரிவித்தார்.

வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபைத் தலைவர் அலிஸாஹிர் மௌலானா, உப தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லீம், நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம், நகரசபை உறுப்பினர்களான ஏ.ஆர். பிரௌஸ், எம்.ஐ. பாஸித் மற்றும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள் தாதியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சுமார் 35000 ரூபாய் பெறுமதியான 6 நிலை மின் விசிறிகள் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .