2025 மே 03, சனிக்கிழமை

இனவாத குழுக்களுக்கு தடை விதிக்குமாறு வலியுறுத்தும் பிரேரணை நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 16 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நாட்டின் இறமையை பாதிக்கின்ற சமாதானத்தை குழப்புகின்ற பொது பல சேனா போன்ற இனவாத குழுக்களை அரசாங்கம் தடை செய்ய செய்ய வேண்டும் எனும் பிரேரணை கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற கிழக்கு மாகாணசபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த பிரேரணை மீதான வாத விவாதங்கள் இடம்பெற்று இறுதியில் அது சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் இடம்பெற்ற முப்பது வருடகால யுத்தத்திற்கு பின்னரான இச்சமாதான கால கட்டத்தில் மூவின மக்களும் சமாதானத்துடனும் சாந்தியுடனும் புரிந்துணர்வுகளின் ஊடாக ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் நாட்டை கட்டியெழுப்பும் பாரிய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில், நாட்டின் இறமையை பாதிக்கின்ற சமாதானத்தை குழப்புகின்ற பொது பல சேனா போன்ற இனவாத குழுக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தி அமைதியை குழப்புகின்றன.

இக்குழுக்களை அரசாங்கம் தடை செய்ய செய்ய வேண்டும். அதற்கு தேவையான ஆதரவினையும், அழுத்தங்களையும் கிழக்கு மாகாணசபை வழங்க வேண்டுமென இந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X