2025 மே 03, சனிக்கிழமை

சமயத்தலங்களின் மாணவர்களின் மீதான அக்கறையை வரவேற்போம்: ந.தயாசீலன்

Super User   / 2014 ஜூலை 16 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


சமயத் தலங்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டுவது வரவேற்கத்தக்கது என்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் கூறினார்.

இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலய பரிபாலன சபையின் அனுசரணையுடன், பட்டிப்பளைப் பிரதேச ஒளிக்கல்லூரி அமைப்பு நாடத்தும் கருத்தரங்கின் ஆரம்பநிகழ்வு புதன்கிழமை (16) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மதத்தில் மட்டும்தான் நாம் ஆலயங்களை வளர்ப்பதற்காக பணத்தினை ஆலயத்திற்கு வழங்க வேண்டியுள்ளது. மற்றய மதங்களிலே உள்ள கோயில்கள் சமூகத்திற்கு பல பணிகளை செய்து வருகின்றன. குறிப்பாக அவர்கள் கல்வியை  வளர்ப்பதில் கூடிய அக்கறை காட்டி வருகின்றனர்.
 
எமது ஆலயங்கள் ஊடாக ஒரு சிறு உதவியாவது கல்விக்காக செய்வோமானால் எமது மக்களின் கல்வியின் நிலையும் உயர்ந்தே நிற்கும்.

இருப்பினும் எமது பிரதேசத்தில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அண்மைக்காலமாக கல்விக்காக பல உதவிகளை வழங்கி வருகின்றது.

அது போல் தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலய நிருவாகத்தினரும் கல்விக்காக சேவை செய்ய முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது. மேலும் அனைத்து ஆலயங்களும் இதுபோன்று முன்வரும் பட்சத்தில எமது எதிர்கால சந்ததியினரின் கல்வி வளர்ச்சியில் பாரிய மாற்றம் ஏற்பட்டு விடும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் ஞா.துரையப்பா, செயலாளர் செ.பரா, ஒளிக்கல்லூரி அமைப்பின் அதிபர் உட்பட நிருவாக உறுப்பினர்கள் மற்றும் இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும் இதில் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X