2025 மே 03, சனிக்கிழமை

நவீன காட்சியறை திறந்து வைப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 19 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம் மட்டக்களப்பு சென் அந்தோனியார் வீதியில் வெள்ளிக்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது.

இந் நவீன காட்சியறையை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என். என். அப்துல்லாஹ் மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆதமடபாவா மீராசாஹிப் மற்றும் முஹமட் முபாறக் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார், கிழக்கு மாகாண உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பணிப்பாளர் எம். கணேசராஜா, சிவில் சமூகத் தலைவர் எஸ். மாமாங்கராஜா மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என். ஏன். அப்துல்லாஹ் முதலில் கொள்வனவு செய்து விற்பனையை ஆரம்பித்து வைத்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X