2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திருடப்பட்ட எருமை மாடுகள் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாகனேரி, கட்டாக்காட்டுப் பிரதேசத்திலுள்ள மாட்டுப்பட்டியொன்றிலிருந்து திருடப்பட்ட 102 எருமை மாடுகளை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாட்டுப்பட்டியிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு  எருமை மாடுகளை திருடிக்கொண்டு ஆளம்குளம் பிரதேசத்தை அண்மித்த திருடர்களிடம், மேற்படி மாடுகள் தொடர்பில் பொதுமக்கள் வினவினர். இந்த நிலையில்,  மாடுகளை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு மேற்படி திருடர்கள் தப்பியோடினர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் மாடுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதற்கிடையில், மேற்படி எருமை மாடுகள் திருட்டுப் போனமை தொடர்பில் உரிமையாளர்கள் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

மேற்படி மாடுகளை திருடியவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X