2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தடைசெய்யப்பட்ட மீன்வலைகள் மீட்பு: இருவர் கைது

Gavitha   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி வாவியில் மீன் பிடிக்கு தடைசெய்யப்பட்ட மீன் வலைகளை கொண்டு மீன்பிடியில் ஈடுபட்ட இருவரை புதன்கிழமை (27) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் அவர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு தொகை வலைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்துள்ளதுடன் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத வலைகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாவிகளில் சட்டவிரோத வலைகளை கொண்டு மீன்படிப்பதால் வாவியிலுள்ள மீனினங்கள் அழிந்து வருகின்றன. அவற்றை தடுக்க பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் இணைந்து கடற்றொழில் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஸ் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X