2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில், கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் ஆரம்பம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் நேற்று (29) வெள்ளிக்கிமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில், மகிழவெட்டுவான் பிரதேசத்தில் நடைபெற்ற இதன் ஆரம்ப வைபவத்தில் பிரதியைமச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் மற்றும் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன், மற்றும் வவுணதீவு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிமலராஜ் உட்பட அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது கொங்கிரீட் வீதிக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்துக்காக ஒரு கிராமத்துக்;கு பத்து இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X