2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கதீப்மார், இமாம்களுக்கு முதல் தடவையாக வட்டியில்லா கடன் திட்டம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல்களில் இமாம்களாக கடமையாற்றும் கதீப் மார் மற்றும் இமாம்களுக்கு முதல் தடவையாக வட்டியில்லா கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தினால் இந்த கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்மேளனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள நிதியத்தின் ஊடாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் ஆரம்ப வைபவம் புதிய காத்தான்குடி பெரிய ஜும் ஆ பள்ளிவாயலில் இன்று (30) நடைபெற்றது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், மற்றும் அதன் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, செயலாளர் மௌலவி எச்.எம்.ஸாஜஹான் உட்பட உலமாக்கள் இமாம்கள், கதீப்மார் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 13 பேருக்கு தலா ஒருவருக்கு 15,000 ரூபாய் வீதம் வட்டியில்லாத கடன் வழங்கி வைக்கப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X