2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இரு கால்களும் முறிந்த யாசகர்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு பஸ் டிப்போவுக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை (30)  இடம்பெற்ற விபத்தின்போது பஸ் வண்டியின்  சில்லினுள் அகப்பட்டதால், வீச்சுக்கல்முனை கிராமத்தைச் சேர்ந்த கே.பார்த்தீபன் (வயது 40) என்ற  யாசகரின்; 02  கால்களும் முறிந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து இடம்பெற்ற வேளையில் இவர் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி விபத்துக்கு காரணமான வாகரை இலங்கைப் போக்குவரத்துச் சாலைக்குச் சொந்தமான    பஸ் வண்டி  மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இது  தொடர்பில்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X