2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுசேர்வதன் மூலம் அரசியல் பலம் அதிகரிக்கும்: நசீர் அகமட்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபடுவதன் மூலமே முஸ்லிம்களின் அரசியல் பலம் அதிகரிக்கும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவருமான ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

காத்தான்குடியில் வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பை பெற்றுக் கொள்வதற்கான நிதியுதவியினை சனிக்கிழமை (30) வழங்கி வைத்த வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் காத்தான்குடி மத்திய குழுவின் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் தலைமையில் நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவிக்கையில்,

அரசியல் தலைவர்கள் பல கட்சிகளாக இன்று பிரிந்து நிற்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கீழ் ஒன்று படுத்தி பலமுள்ள முஸ்லிம் அரசியல் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸை கொண்டு வரவேண்டும்.

இதில் ஒரு கட்டமாகவே ஊவா மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஒன்றுபட்டு போட்டியிடுகின்றது.

இதனூடாக முஸ்லிம்களின் அரசியல் ஒற்றுமை பலப்படுத்தப்பட வேண்டும். இதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் நாம் வழங்க வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் காலத்தின் ஒரு குடையின் கீழ் இருந்தது போல இந்தக்கட்சியில் அனைவரையும் ஒன்றுபடுத்தி ஒரு குடையின் கீழ் கொண்டு வரவேண்டும்.

இதற்காக இன்று பிரிந்து நிற்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனைவரையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் கொண்டு வரவேண்டும்.

நமக்குள் பிரதேச வாதம் தேவையில்லை, காத்தான்குடி ஏறாவூர், ஓட்டமாவடி என்ற ஊர்ப்பாகுபாடு இருக்ககூடாது. அனைவரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் என்றே இருக்க வேண்டும். பிரதேச வாதம் நமக்குள் இருந்தால் நமது ஒற்றுமை பலவீனமடைந்து விடும் என மாகாண அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X