2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தமிழ் மொழி மூல அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

Super User   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


 - ஏ.எச்.ஏ.ஹூஸைன்


அரச கரும மொழிக் கொள்கைக்கு அமைவாக சிங்கள மொழியைக் கற்றுக் கொண்ட தமிழ் மொழி மூல அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (03)  மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி திணைக்களம் மற்றும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து மாவட்ட உள்ளுராட்சி நிருவாகத்தினரின் அனுசரணையுடன்  மட்டக்களப்பில் 12 நாள் மாற்று மொழிப் பயிற்சி நெறியை நடாத்தியிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் அதிகாரிகளுமாக சுமார் 70 பேர் இந்தப் பயிற்சி நெறிகளில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவு பொறுப்பு பிரதி பிரதம செயலாளர் திருமதி ஜே.முரளிதரன், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனப் பணிப்பாளர் எஸ்.கோபிநாத், வளவாளர்களான எஸ்.அல்பேர்ட், எம்.டப்ளியு.பிரியங்கிகா, ஏ.கே.மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் சிந்தனைக்கு அமைவாக தமிழ் மொழி மூல அரச உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழியும், சிங்கள மொழி மூல அரச உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியும் கற்பிக்கும் தேசிய மொழிப் பயிற்சித் திட்டம் மாவட்ட ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X