2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சேலை ரவிக்கை கத்தரிக்கும் பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தால் நடத்தப்பட்ட சேலை ரவிக்கை கத்தரிக்கும்  பயிற்சியை முடித்துக்கொண்ட 40 யுவதிகளுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (31)  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கிராம மற்றும் நகர்ப் புறங்களில் படித்துவிட்டு வேலைவாய்ப்பு அற்றிருந்த  யுவதிகள்  இந்தப் பயிற்சியில் பங்குபற்றினர்.

மட்டக்களப்பு மாவட்ட அலுவலக  உத்தியோகஸ்தர் மோகன் பிரேம்குமாரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.அப்துல் அசீஸ்; பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இதன் பின்னர் இங்கு  உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.அப்துல் அசீஸ்,

'இந்தப் பயிற்சி குறைந்த வருமானம் பெற்றுக்கொண்டிருக்கும் அல்லது வருமானமின்றி; இருக்கும் குறிப்பிட்ட தொழிலில் ஆர்வமுடையவர்களுக்காக  ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியை பெற்றுக்கொண்ட நீங்கள் எதிர்காலத்தில்  தேவைக்காகவும் வருமானத்தை ஈட்டக்கூடியதாகவும் பயன்படுத்த வேண்டும்.

தையல் தொழிலை நீங்கள் சிறந்த முறையில் தொடர்ச்சியாக செய்வீர்களானால், எதிர்காலத்தில் நல்ல வருமானத்தை பெற்று வாழ்கைத்தரத்தை மேலும் உயர்த்தலாம்.' என்றார்.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தால் கையடக்கத் தொலைபேசி திருத்துதல், அழகுக்கலை, சேலை ரவிக்கை  வெட்டுதல் போன்றவை தொடர்பில் குறுகியகால பயிற்சிகள் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் 4 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டதாக  மட்டக்களப்பு மாவட்ட அலுவலக உத்தியோகஸ்தர்  மோகன் பிரேம்குமார் தெரிவித்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X