2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மையவாடிகளை பராமரிக்க தீர்மானம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியிலுள்ள மையவாடிகளை காத்தான்குடி நகரசபைத்  பராமரிப்பதற்கு  தீர்மானித்துள்ளதாக நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடி, காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடி, காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடி, புதிய காத்தான்குடி பதுறியா ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடி, புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடி, புதிய காத்தான்குடி நூறானிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடி ஆகியன உள்ளன.

மேற்படி 06 மையவாடிகளையும்   பராமரிக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.  மேலும், மேற்படி  மையவாடிகள் பள்ளிவாசல்களுக்கு இருக்கின்றபோதிலும், இவற்றை  பராமரிக்கும் வேலையை காத்தான்குடி நகரசபை மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X