2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கல்வி சாரா ஊழியர்களுக்கான நியமனக் கடிதமும் கைப்பணிப் பயிற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் ஞாயிற்றுக்கிழமை இரவு (31) ஏறாவூரில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றுவதற்காக கிழக்கு மாகாண விவசாய கால் நடை உற்பத்தி அபிவிருத்தி அமைச்சர் நஸீர் அஹமட்டினால் நியமனம் செய்யப்பட்ட 20 இளைஞர் யுவதிகள் நியமனக் கடிதத்தை அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள்.

இதேவேளை கைப்பணிப் பயிற்சிகளை முடித்துக் கொண்ட 72 யுவதிகளுக்கும் பயிற்சிச் சான்றிதழ்கள் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கிராமிய உற்பத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் ரீ.எம்.எல்.டீ. தென்னக்கோன், மாகாண சுற்றுலாத்துறை அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஞானசேகர் உட்பட இன்னும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X