2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்ற உத்தியோகஸ்தர்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கான வினைத்திறன் மிக்க வரவு – செலவுத்திட்டங்களை தயாரிப்பது தொடர்பான  2 நாள் வதிவிட பயிற்சிச் செயலமர்வு மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை (2) ஆரம்பமாகியது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆசியமன்;றத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற இந்தச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில்; ஆசியமன்றத்தின் பிரதிப் பணி;ப்பாளர் ஏ.சுபாகரன்,  கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் பிரதம கணக்காளர் எம்.உதயரஞ்சன்,  அக்கரைப்பற்று மாநகரசபை ஆணையாளர் எம்.அஸ்மி, ஆசியமன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரிகளான எம்.வலீத், றிசாத் சரிப், எஸ்.சசிகரன் உட்பட அதன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தச் செயலமர்வில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சிமன்றங்களில் கடமையாற்றும் 60 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X