2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'இமாம்கள், கதீப்மார் சமூக ஒற்றுமைக்காக உழைக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பள்ளிவாசல்களின் இமாம்கள் மற்றும் கதீப்மார் சமூக ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் கட்டி வளர்ப்பதற்கு  உழைக்க வேண்டுமென  ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி அஸ்ஸெய்ஹ் எஸ்.ஹஸன் மௌலானா தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளன உறுப்பினர்களை நேற்று செவ்வாய்க்கிழமை (2)  சந்தித்தபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வருகைதந்த  ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி அஸ்ஸெய்ஹ் எஸ்.ஹஸன் மௌலானாவை, காத்தான்குடி பள்ளிவாசல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளன உறுப்பினர்கள் வரவேற்றனர்.

இதன்போது, இவர் காத்தான்குடி பள்ளிவாசல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை மற்றும் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபாவினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'தற்போதுள்ள காலகட்டம் முக்கியமான காலகட்டமாகும். இந்தக் காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் செயற்பட வேண்டும். இதற்காக பள்ளிவாசல்களின் இமாம்கள் மற்றும் கதீப்மார் உழைக்க வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஒன்றுபட்டு காலத்தின் தேவைக்கேற்ப செயற்பட வேண்டும்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனம் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது என்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். எதிர்காலத்தில் எனது ஒத்துழைப்பும் உதவியும் இந்த அமைப்புக்கு இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்' என்றார்.

இந்த நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை,  செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா உட்பட  பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது,  பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் ஜனாதிபதியின் விசேட நிதியிலிருந்து நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் நிர்மாண வேலைகளை கலாநிதி அஸ்ஸெய்ஹ் எஸ்.ஹஸன் மௌலானா பார்வையிட்டதுடன்,   காத்தான்குடி அன்வர் வித்தியாலயம் மற்றும் காத்தான்குடி ஹஸனாத் வித்தியாலயத்துக்கும்  சென்று அங்குள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X