2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

டெங்கு விழிப்புணர்வு சித்திரப் போட்டியில் வெற்றீட்டியவர்களுக்கு சான்றிதழ்கள்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


'டெங்கு இல்லாத இலங்கை'  என்ற தொனிப்பொருளில் சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினூடாக நடத்திய  டெங்கு விழிப்புணர்வு சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பணப்பரிசும் சான்றிதழ்களும் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டன.

டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  சித்திரங்களை வரைந்து, மாவட்ட மட்டத்தில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றனர்.

முதலாமிடம் பெற்ற ஏறாவூர் றஹுமானியா வித்தியாலயத்தைச் சேர்ந்த எம்.ஏ.சுல்கிப்லிக்கு 5,000 ரூபாய் பணப்பரிசும் சான்றிதழும் இரண்டாமிடம் பெற்ற அதே பாடசாலை மாணவன் எம்.ஏ.எம்.அஸ்பக்கிற்கு 3,000 ரூபாய் பணப்பரிசும் சான்றிதழும் மூன்றாமிடம்; பெற்ற ஏறாவூர் அறபா வித்தியாலயத்தைச் சேர்ந்த எம்.எப்.அஸ்பாக் அஹமட்டிற்கு 2,000 ரூபாய் பணப்பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

மேலும், 5 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா 1,000 ரூபாய் பணப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம் தலைமையில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு  இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் கே.தர்ஷினி, ஏறாவூர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.தாரிக், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.தேவராஜன், ஏறாவூர் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.எச்.எம்.பழீல், மட்டக்களப்பு மத்தி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன், மத்தி வலய சுகாதாரக் கல்வி அதிகாரி ஏ.எல்.புகாரிதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம்,


 'மாணவர்கள் தங்களது  இளவயதிலிருந்து  வீடு மற்றும் பாடசாலைச் சுற்றாடல்களை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்பது  தொடர்பில்; பழகினால்தான், வாழ்க்கைக்காலம் முழுவதிலும் அது உங்களுக்கும் நாட்டுக்கும் பிரயோசனப்படும்.' 

சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மாணவர்களை மையப்படுத்தி இந்தச் சித்திரப்போட்டியை நடத்தியதன் நோக்கம் மாணவர்களை இளவயதிலிரு;நது  பழக்கப்படுத்தி எடுப்பதுதான்.  'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்றும் 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்றும் நம் முன்னோர்  பழமொழிகளைக் கூறுவார்கள். 

சிறந்த ஒரு மாணவராகவும் நல்லதொரு குடும்ப அங்கத்தவராகவும் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றியும் சுற்றாடல் பாடத்தில் வழிகாட்டப்பட்டுள்ளது.
அத்தகைய வழிகாட்டல்களை நீங்கள் தினமும் பின்பற்றினால் டெங்கு நோயை இப்பிராந்தியத்திலிருந்தே ஒழித்து விடலாம். அத்தோடு, பாடசாலை நாட்களில் வாரத்தில் ஒரு நாளில் ஒரு சில மணி நேரங்களை உங்களது பாடசாலைச் சுற்றாடலைச் சுத்தம் செய்வதற்கு ஒதுக்குமாறு ஜனாதிபதி செயலகம் வலியுறுத்தியிருக்கின்றது.

பாடசாலைச் சூழலை மட்டுமல்லாது நீங்கள் வசிக்கின்ற எந்தச் சூழலாக இருந்தாலும், அந்த இடத்தைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் அதன் மூலமாக நீங்கள் மற்றவர்களைத் தூண்டுவதற்கும் உங்களது செயற்பாடுகள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்'   என்றார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X