2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஆடுகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -ஏ.எச்.ஏ.ஹுஸைன்


வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 4 பெண் தலைமைத்துவ  குடும்பங்களுக்கு  வாழ்வாதார உதவியாக ஆடுகளை  ஸ்ரீலங்கா முஸ்லிம் எய்ட் நிறுவனம் புதன்கிழமை (3) வழங்கியதாக அந்த  நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி பஸ்லான் தாஸிம் தெரிவித்தார்.

இதன்போது, ஒவ்வொரு  குடும்பத்துக்கும் 30,000 ரூபாய் பெறுமதியான  ஆடுகள்  வழங்கப்பட்டது.

ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஐயன்கேணிக் கிராமத்தில் நடைபெற்ற இந்த  நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி பஸ்லான் தாஸிம், வாழ்வாதாரத்திட்ட அலுவலர் எம்.நுஸ்ரத் அலி, நிர்வாக உதவியாளர் எம்.ஏ.எம்.இர்ஷாத் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X