2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உடைந்துள்ள மின்கம்பம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச சபையால் நிர்வகிக்கப்படும் பொதுநூலகத்துக்கு முன்பாகவுள்ள 5ஆம் குறுக்கு வீதியிலுள்ள மின்கம்பம் கடந்த ஒரு மாதமாக  உடைந்து  காணப்படுவதாக  நூலக வாசகர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்மின்கம்பம் அதி மின் அழுத்தத்தைக் கடத்தும் மின்கம்பிகளை தாங்கியுள்ளது. 

இது பற்றி வவுணதீவு பிரதேச சபைக்கும் மட்டக்களப்பு இலங்கை மின்சார சபைக்கும் அறிவித்தும், இதுவரையில்  திருத்தவேலை மேற்கொள்ளப்படவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்சமயம் மாலை வேளைகளில் இடி, மின்னலுடன்  மழையும்  பலத்த காற்றும் வீசுவதால் இம்மின்கம்பம் நூலகத்தின் மீது சரிந்து விழுந்து

பேராபத்தை விளைவிக்கலாம் என  பிரதேசவாசிகளும் நூலகத்தை பயன்படுத்துவோரும் அஞ்சுகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X