2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பட்டாபுரத்தில் பொதுக்கட்டடம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டு. போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பட்டாபுரம் கிராமத்தில் பொதுக்கட்டடம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று வெள்ளிக்கிழமை நாட்டினார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன். ரவீந்திரன், பெரிய போரதீவு ஸ்ரீபத்திரகாளியம்மன் தேவஸ்தான வை.இ.எஸ்.காந்தன் குருக்கள், போரதீவுப்பற்று பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே.குணரெட்ணம்,  கிராம உத்தியோகஸ்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர், வாழ்வின் எழுச்சித்திட்ட உத்தியோகஸ்தர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

10 இலட்சம் ரூபாய்  செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கட்டடத்தில் அரச காரியாலயங்களும் ஒன்றுகூடல் மண்டபமும் அமையப் பெறவுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X