2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தடைப்பட்ட தபால் பொதிகள் அனுப்பிவைப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கடந்த மூன்று தினங்களாக கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணத்துக்கு  வந்துசேராதிருந்த  தபால் பொதிகள் இன்று வெள்ளிக்கிழமை  காலை முதல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக  கிழக்கு மாகாணத் தபால் அதிபர்கள் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் புதன்கிழமையிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத்  தபால் பொதிகள்  கொழும்பிலிருந்து வராமலிருந்தது.

கொழும்பு மத்திய தபால் தரம் பிரிப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற பணிநிறுத்தம் காரணமாகவே இந்தத் தபால் பொதிகள் 3 நாட்களாக வராதிருந்ததாகவும் தபால் அதிபர்கள் கூறினர்.


 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X