2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு பயிற்சி

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபார அபிவிருத்தி சேவைகள் பற்றிய பயிற்சி ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.

வை.எம்.சீ.ஏ. அமைப்பின் வெளிக்கள அலுவலர் எம்.பிரசாந்தினி தலைமையில்  ஆரம்பமான இப்பயிற்சி நாளை சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. 

சிறுகைத்தொழில் செய்யும் பெண் முயற்சியாளர்களுக்கான வியாபாரத்தை விருத்தி செய்யும் நோக்கில் இந்தப் பயிற்சி  நடத்தப்படுவதாக வை.எம்.சீ.ஏ. அமைப்பின் வெளிக்கள அலுவலர் எம்.பிரசாந்தினி தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள நலிவுற்ற பெண்களை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சிகள் மாவட்டமெங்கும் நடத்தப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் சேவ் த சில்ரன் மற்றும் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. நிறுவனங்கள் கூட்டாக இத்திட்டத்தை அமுல்படுத்துகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X