2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பரிசளிப்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


மட்டக்களப்பு, மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஏற்பாட்டில் 'டெங்கு அற்ற இலங்கை' என்ற தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட ஓவிய போட்டியில், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஓவியங்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (04) மகிழடித்தீவு வைத்திய சுகாதார அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.ஸ்ரீநாத் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், உக்டா நிறுவன தலைவர், வைத்திய அதிகாரிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மண்முனை தென்மேற்கு கோட்டத்துக்குட்படட பாடசாலை மாணவர்களிடத்தில் நடத்தப்பட்ட இந்த ஓவியப் போட்டியில், மிகச்சிறந்த 10 ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X