2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்திகளுக்கு நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை மற்றும் பாலமுனை பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்காக ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத் 16 இலட்சம் ரூபாய் நிதி  ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் பசீர் சேகுதாவூதின் இணைப்புச் செயலாளர் எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் விசேட நிதியிலிருந்து விசேட திட்டங்களுக்காக இந்த நிதி அமைச்சர் பசீர் சேகுதாவூதின் சிபாரிசில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் காங்கேயனோடை பசீர் சேகுதாவூத் நூலக அபிவிருத்திக்காக 8 இலட்சம் ரூபாய்யும் பாலமுனை முகைதீன் விளையாட்டுக்கழக புனரமைப்புக்காக 6 இலட்சம் ரூபாய்யும் காங்கேயனோடை முகம்மதிய்யா மீனவர் கூட்டுறவுச் சங்கத்துக்கு  ஒரு இலட்சம் ரூபாய்யும்  காங்கேயனோடை மைய்யவாடிக்கு மின்சார இணைப்புக்காக ஒரு இலட்சம் ரூபாய்யும்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X