2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தைவாய்ப்பை ஏற்படுத்தி, வியாபார நடவடிக்கையை  ஊக்குவிக்கும்  முகமாக மாபெரும் கண்காட்சி மற்றும் விற்பனையை மூன்றாவது தடவையாகவும் நடத்துவதற்கு மட்டக்களப்பு காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12ஆம் 13ஆம் 14ஆம் திகதிகளில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் சுவிடிஸ் கூட்டுறவு நிலையத்தின் அனுசரணையுடன்  இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளதாக காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் ரதி அஜித்குமார் தெரிவித்தார்.

120 இற்கும்  மேற்பட்ட விற்பனைக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து கைத்தொழிலாளர்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தவுள்ளனர்.

கண்காட்சி நடைபெறும் தினங்களில் கலை, கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இங்கு   கிராமிய உணவுகள் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களின் உள்ளூர் உற்பத்திகளை காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் முன்னுரிமை வழங்கப்படும். மேலும்,   கணவன்மார்களை  இழந்த பெண்களின் உற்பத்திகளும்; காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவர்களுக்கு சந்தைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் தமது உற்பத்திகளை மேலும் வினைத்திறன் மிக்கதாக கொண்டுசெல்லும் வகையிலும் இந்தக் கண்காட்சி அமையவுள்ளது எனவும் அவர் கூறினார்.

கண்காட்சியை  பார்வையிடுவோருக்கான அனுமதி இலவசம் எனவும் அவர் கூறினார்.

ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 12ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X