2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீதியை புனரமைத்துத் தருமாறு மக்கள் வேண்டுகோள்

Super User   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வடிவேல் சக்திவேல் 


மட்டு. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுதாவளை மத்தி, வன்னியார் வீதியை புனரமைத்து தருமாறு களுதாவளை மத்தி கிராம மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குச் சொந்தமாக இவ்வீதி மிக நீண்ட காலமாக பழுதடைந்து கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவும், இதுவரை இவ்வீதி புனரமைப்புச் செய்யப்படாமலிருப்பதனால் கிராமத்திலுள்ள பலரும் சிரமத்தின் மத்தியில் இவ்வீதியைப் பயன்படுத்தி வருவதாகவும் அக்கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வீதியின் அபிவிருத்திக்கு இதுவரையில் ஒதுக்கீடுகள் தமக்கு கிடைக்கப் பெறவில்லை என இவ்விடயம் குறித்து கேட்டபோது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இருந்தபோதும் சுமார் 1.5 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இவ்வீதியை புனரமைப்புச் செய்து தருமாறு இவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் இன்று புதன்கிழமை (10) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள், போன்றோர் பலரும், சிரமப்படுவதாகவும், பொதுச்சந்தை, பொதுக்கட்டிடம் இலங்கேசன் இந்து மன்றம் போன்றவற்றிற்குச் செல்பவர்களும் சிரமத்தை எதிர் கொண்டு வருவதாகவும், இவ்வீதியால் நடந்து செல்பவர்கள்கூட சிரமப்படுவதாகவும் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பிவைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X