2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மனிதக் கடத்தல்காரர் மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் மனிதக் கடத்தல்காரர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மூவரை கைதுசெய்ததாக  மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை (10) களுவாஞ்சிக்குடியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகனச் சோதனையின்போது இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்த வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஆவணங்களை பரிசீலித்ததைத் தொடர்ந்து,  அக்கரைப்பற்றில் மற்றுமொருவரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

களுவாஞ்சிக்குடியில் கைதுசெய்யப்பட்ட  இருவரும் அட்டாளைச்சேனையையும்  மற்றைய சந்தேக நபர்; அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி சந்தேக நபர்கள் வெளிநாடுகளுக்கு ஆட்கள் செல்வதற்கு தூண்டி அனுப்பிவைப்பதுடன், இவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு  தேவையான ஆவணங்களை மோசடியான முறையில்  தயாரித்துக்;கொடுத்து பெருந்தொகை பணம் பெற்றுவந்துள்ளதாக விசாரணையிலிருந்து  தெரியவந்துள்ளது. 

இவர்களிடம் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சுமார் 250 பேருக்கு மேற்பட்டோருக்கு மோசடியான முறையில் ஆவணங்களைத் தயாரித்துக்கொடுத்து சட்டவிரோதமாக மேற்கு நாடுகளுக்கு அனுப்புவதற்கு சந்தேக நபர்கள் முனைந்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் மோசடியான முறையில்  ஆவணங்களை தயாரித்துக்கொடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்கெனவே 10  பேரை சட்டவிரோதமாக அனுப்பியுள்ளார். மேலும், இந்தச் சந்தேக நபர்  பிராந்திய பத்திரிகை வெளியீடுகளை போலியாக தயாரிப்பவர் என்பதுடன், இதன் மூலமாக சட்டவிரோதக்குடியேறிகளுக்கு போலி பத்திரிகை ஆதாரங்களை ஆவணமாகத் தயார் செய்பவர் எனவும் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சந்தேக நபர்கள்  மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X