2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேக நபருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகக்கூடாதெனக் கூறி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு  உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஆஜராகக்கூடாதெனக் கூறி  மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு முன்பாக  வியாழக்கிழமை (11) பகல் அப்பிரதேச மக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 'சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய பொலிஸார் அசத்தியவாதிகளுக்கு துணை போவதா', 'சிறுவர் துஷ்பிரயோக ஒழிப்பு அதிகாரிகளே எங்கள் விடயத்தில் அக்கறை செலுத்துங்கள்', 'சட்டத்தரணிகளே கொலைகாரர்களுக்கு ஆதரவாக இருக்காதீர்கள்'  போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்  தாங்கியிருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்த சட்டத்தரணிகள் சிலர்,  ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினர்.

புதன்கிழமை (10) இந்தச் சிறுமி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு  உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வியாழக்கிழமை (11) வியாழக்கிழமை அதிகாலை செங்கலடி பதுளை வீதியில் கைதுசெய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0

  • sundar Thursday, 11 September 2014 04:10 PM

    Evanai thukil podalam

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X