2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாழடைந்த கிணற்றிலிருந்து துப்பாக்கி, ரவைகள் மீட்பு

George   / 2014 செப்டெம்பர் 11 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு கதிரவெளி பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து, துப்பாக்கி ஒன்றினையும் அதற்கு பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகளையும் இராணுவத்தினர், இன்று வியாழக்கிழமை(11) பிற்பகல் மீட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மாலை வீட்டு உரிமையாளர்கள் தமது வளவிற்குள் சென்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கிணற்றினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது அதனுள் இருந்து மர்மப் பொருள் ஒன்று தென்படுவதை கண்டு அருகில் இருந்த இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து வாகரை 233ஆவது படைப்பிரிவினர் குறித்த இடத்திற்கு சென்று கிணற்றினுள் காணப்பட்ட பொருட்களை மீட்டுள்ளனர்.
இதன்போது ரி.56-1 ரக துப்பாக்கி-01, ரவைக்கூடு-2, மற்றும் 30 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X